#செய்திகள்

தமிழகத்தில் ஏப் 6 ல் ஒரே கட்டமாக தேர்தல்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

மகளிர் காவல் நிலைய சார்பில் கொரோனா விழிப்புணர்வு

*🚨 கள்ளக்குறிச்சி👆* *கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் இன்று 21-10-2020 அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் விளம்பாவூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது* *கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் கொரனோ நோய் தொடர்பாக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும்,...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 67.33 லட்சமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 69,721 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,33,329 ஆக உயர்ந்துள்ளது. மேலும்...

கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு

3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக நேற்று கேரளாவுக்கு வந்தார். கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு பகல் 12 மணிக்கு விமானத்தில் வந்தடைந்தார். வயநாடு தொகுதியில் அடங்கிய மலப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில்...

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஆய்வு

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை ஆய்வு செய்தார்.அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது...

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியதாவது:- எந்தவொரு அடுத்த தொற்றுநோயையும் சமாளிக்க உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு தொற்றுநோயையும்...

நிதியை நிறுத்தி வாசிப்புக்கு தடை போட்ட அரசு: நூலக வாசகர்கள் கடும் அதிருப்தி

தமிழகத்தில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், மக்களின் பொதுஅறிவை வளர்க்கும் நுாலகங்கள் திறக்கப்பட்டும், வாசிப்பதற்கு அனுமதி இல்லாததால் வாசகர்கள் தவிக்கின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, நுாலகத்தில் நாளிதழ்கள் வாசிப்பை அனுமதிக்க வேண்டும் என, வாசகர்கள் வட்டம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. பொதுஅறிவையும், சமூக அறிவையும் வளர்க்கும் பொக்கிஷமாக நுாலகங்கள் விளங்குகின்றன....

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு...

கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் 87 வயது டாக்டர்

மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும், 87 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில், ராம்சந்திர தாண்டேக்கர், என்ற, 87 வயதான டாக்டர் வசித்து வருகிறார். இவர், 60 ஆண்டுகளாக, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள குக்கிராமங்களுக்கு...

நீட் தேர்வு முறைகேடு; புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரிப்பு

நீட் தேர்வு முறைகேடில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட நிலையில், அவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்...
- Advertisement -

Latest News

பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேருக்கு நேர் மோதுகிறது. பிரியங்கா காந்தி தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே...
- Advertisement -