விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்
அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று வல்லரசு ஆனது.
1930-களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.
ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!
எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
– ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
தாலி பாக்கியம் நிலைக்கும் சப்த கன்னியர் !!
சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் வெகு குறைவு. சப்தகன்னியரில் மிக முக்கியமான தெய்வமாக வராஹி போற்றப்படுகிறாள். அதேபோல், கெளமாரியும் வணங்கப்படுகிறாள். கெளமாரியம்மனுக்கு கிராமங்களில் தனிச்சந்நிதியும் தனிக்கோயிலுமே அமைக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரி அம்மன் !!
திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
புதிய வசதியுடன் பிளாட்டினா 110 அறிமுகம்!!
பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா இஎஸ் வேரியண்டை தொடர்ந்து இந்தியாவில் ஏபிஎஸ் வசதி கொண்ட பிளாட்டினா 110 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம் !!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மாடலின் XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் !!
சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போனினை அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்தது.
அறிக்கையை வெளியிட்ட பாமக …
மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு ..
கொரோனா பரவல் எதிரொலியாக 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதியில் கோவா-மும்பை இன்று மோதல்..
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை சிட்டி (12 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), 4-வது இடம் பெற்ற கோவா (7 வெற்றி, 10 டிரா, 3 தோல்வி) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் வருகிற 8-ந் தேதி மீண்டும் ஒருமுறை அரைஇறுதியில் மோதும். இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சமநிலை ஏற்பட்டால் கோல் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ஐ.எஸ்.எல். வரலாற்றில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 7-ல் கோவாவும், 5-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அரைஇறுதியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொட
கால் இறுதியில் பி.வி.சிந்து !!
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தாமஸ் ரோக்சலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அரிஸ் வாங்கை (அமெரிக்கா) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் ரோக்சலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் போராடி பிட்டயாபோர்ன் சவானிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார். உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தரவரிசையில் நிறைய முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளார். இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் தகுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது
ஒரே நாளில் 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி …
தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 396 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் 43-வது நாளாக நேற்று 1,308 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81 ஆயிரத்து 26 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 63 ஆயிரத்து 646 பேர் முதல் முறையாகவும், 17 ஆயிரத்து 380 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரத்து 467 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 30 ஆயிரத்து 986 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 8 ஆயிரத்து 825 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 25 ஆயிரத்து 748 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 396 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து..
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டு தற்போது முழு அளவில் விமான சேவைகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு விமானங்கள் 250-ல் இருந்து 260 வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல பயணிகள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.
ஆனால் நேற்று பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை பயணிகள் சுமார் 18,500 போ் மட்டுமே பயணித்தனர். அதேபோல் புறப்பாடு, வருகை விமானங்கள் என 231 விமானங்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.
இதற்கிடையே சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதைபோல் இந்த இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகமான வெயில் கரணமாக வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம் !!!
வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு புயல் மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டதால் வீராணம் ஏரி கரை ஓர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் தீவு போல் காட்சி அளித்தது. தற்போது வடவாறு வழியாக தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. அதோடு மழையும் பெய்யவில்லை.
ஆனால் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 40.59 அடியாக குறைந்துள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்காக 79 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பிவைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்னாள் பிரதமர் தண்டனை ரத்தா?
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. இது வரும் 25-ந் தேதி முடிகிறது.
அவர் உள்நாட்டில் சிகிச்சை பெறலாம், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது ஜாமீன் நிபந்தனை ஆகும்.
தற்போது அவரது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.
இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசதுஸ்ஸாமான் கான் கமல் கூறுகையில், “வங்காளதேச தேசியவாத கட்சியின்தலைவர் கலீதா ஜியாவின் தண்டனையை ரத்து செய்து, விடுவிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதையொட்டி அவரது சகோதரர் சமீம் இஸ்கந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்” என தெரிவித்தார்.
இதனால் கலீதா ஜியாவின் தண்டனை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு அங்கு எழுந்துள்ளது.