26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

சின்னசேலம்

சின்னசேலத்தில் ரூ8.75 லட்சம் மதிப்புள்ள 7 பைக் பறிமுதல் ! பலே திருடன் கைது..

சின்னசேலம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய பைக்கை கடந்த 8.10.20 அன்று இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ50,000 இருக்கும். இதைப்போல சின்னசேலம் செங்குந்தர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய பைக்கை மர்ம நபர்கள் கடந்த 1.10.20 அன்று திருடி சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ60,000...

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமம் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடை கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை தொட்டியம் கிராமத்தில் பங்காரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கு டாஸ்மாக்கடை...

சின்ன சேலத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு !

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் IPS அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமநாதன் அவர்கள் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து சின்னசேலம் பேருந்து நிலையம் முன்பு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்குண்டான தண்டனைகளை பற்றி எடுத்துக்...

இடவசதியின்றி காணப்படும் சின்னசேலம் பஸ் நிலையம்

சின்னசேலம் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் அதனை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சின்னசேலத்தில் கடந்த 2003ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் மற்றும் 18 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த பஸ் நிலையத்திற்கு சேலம், பெரம்பலுார், சென்னை, விழுப்புரம், வெள்ளிமலை, கச்சிராயபாளையம் போன்ற பகுதிகளிலிருந்து...

கேஸ் சிலிண்டர் வெடித்து 5 கூரை வீடுகள் தீயில் கருகி சேதம்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி கிராமத்தில்  மணி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது இதனால் கூரை வீட்டில் ஏற்பட்ட தீ ஆனது அருகே இருக்கக்கூடிய இளவரசன் ,சின்ன துரை ,சின்ன சாமி ,பெரியசாமி ஆகியோர் வீடுகளுக்குள் மளமளவென பரவியது இதனை அறிந்த கிராம மக்கள் ஒவ்வொருவரும் கூட்டாக...

பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

சின்னசேலம் அருகே கார் மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த பாபு, 32; இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஜெயபாலுடன் வினை தீர்த்தாபுரத்திற்கு பைக்கில்பங்காரம் பிரிவு ரோட்டிற்கு சென்று சாலையை கடக்கும் போது, சென்னை - சேலம் நோக்கி சென்ற டிஎண் 33 சிஎல் 9901 என்ற...

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை!!!

சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுடைய மகள் கீர்த்திகா (வயது 16). இவர் மேல்நாரியப்பனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கீர்த்திகா வீட்டில் இருந்து வந்தார்.   இந்த நிலையில் இவர் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதை...

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குஎம்.எல்.ஏ., நிதியுதவி!!!

சின்னசேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நிதியுதவி வழங்கினார்.சின்னசேலம் அடுத்த நையினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; இவரது குடும்பத்தினர், சில தினங்களுக்கு முன் கோவிலுக்குச் செல்ல விருத்தாசலம் சென்ற போது, வேப்பூர் அருகே நடந்த விபத்தில் இவரது மகன், மருமகள், பேத்தி மற்றும் பேரக்குழந்தைகள்...

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அதையொட்டி, மாவட்டத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா 1,000 ரூபாய்...

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னசேலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு பயிருக்கு அடுத்ததாக மானாவாரி மற்றும் இறவையில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். குளிர்கால இறவைப் பயிராக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திலும், கோடைகால பயிராக பிப்ரவரி -...
- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
- Advertisement -