திருச்சி, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார். இந்த நிலையில், திருச்சி, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு டிஜஜி ஆனி விஜயா தடை விதித்துள்ளார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Must Read
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
- Advertisement -
Latest News
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
- Advertisement -
More Articles Like This
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம்…
நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 4 நாட்கள் தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
...
பாஜக-வை தோற்கடிப்போம் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாயிகள் சார்பில் பா.ஜனதாவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வோம் என விவசாய சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி எல்லையில் விவசாயிகள்...