4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர்: செல்லூர் ராஜூ…

“4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என வால்போஸ்ட் ஓட்டுகிறார்கள். யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

Madurai-If-4-films-run-they-will-put-up-a-poster-saying-I-am-the-Chief-Minister-Sellur-Raju

                                                                   செல்லூர் ராஜூ

மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் வித்திட்டவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் திரைப்படங்களில் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தான் நடித்த படங்கள் அனைத்திலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.

image

இப்போதெல்லாம் நடிகர்களுக்கு 4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என வால்போஸ்ட் ஓட்டுகிறார்கள். யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுகவை துவக்கியவர் அறிஞர் அண்ணா, ஆனால் திமுகவில் அண்ணாவின் பெயரோ, அவரது புகைப்படமோ இருக்காது. திமுகவில் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே உள்ளது.

பொங்கல் பரிசு எல்லோருக்கும் சென்றடைந்ததற்கு, எம்ஜிஆரின் தொண்டன், பக்தன் இந்த செல்லூர் ராஜூதான் காரணம். மதுரை சிறக்க வேண்டும் என என்னாலும் நினைத்து கொண்டு வாழும் உண்மையான தொண்டன்நான். கடந்த 10 ஆண்டுகளில் நான் பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன். உண்மையை சொல்வேன் செய்வதை சொல்வேன். செய்ய முடியாததை முடியாது என சொல்வேன். என் அமைச்சர் வாழ்வில் ஆசாபாசங்களுக்கு இடம் கிடையாது.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை நாங்கள் பட்டியலிடுவதை போன்று திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை சொல்ல தைரியம் உள்ளதா. எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக திமுக நினைத்தது. ஆனால் புயல் வேகத்தில் செயல்படுகிறார்.

பெட்டி பாம்பாக அடங்கியுள்ள திமுக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆட்டமாக ஆடும். திமுகவினர் பசி பட்டினியாக இருக்கிறார்கள். ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். நான் சொல்லி 24 மணிநேரத்தில் மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வந்தவன் நான். நாங்கள் மதுரைக்காரன். நம்பினால் உயிரை கொடுப்போம், இல்லை என்றால் நான் அதை கூற விரும்பவில்லை.”என்றார்.