தேசிய கீதம் பாடும் போது, உணர்ச்சி மிகுதியில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் !!

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

தேசிய கீதம் பாடும் போது, உணர்ச்சி மிகுதியில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் சிந்திய காட்சிகள், ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர், இருநாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது உணர்ச்சி வயப்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், கண்ணீர் சிந்தியவாறு தேசிய கீதம் பாடினார். இந்த வீடியோவை பகிர்ந்து, சிராஜை ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.