26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

14 ஆண்டுகளாக தொலைந்து போன வரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலரின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்ந்தார் !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

Police News 21.07.2020
Police News 21.07.2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கருப்பையா இவர் குருநாகல தடுப்பு பணிகள் கடந்த மூன்று மாதங்களாக கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் உள்ள பணிகளில் ஈடுபட்டு வந்தார் அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் அதிக முடியுடனும் முகத்தில் தாடியுடனும் சுற்றித்திரிந்தார் அவருக்கு பழம், உணவு போன்றவற்றை காவலர் கருப்பையா வழங்கி வந்துள்ளார் இந்த நிலையில் திடீரென கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர் இருந்த அவருக்கு சிகை அலங்காரம் செய்து மொட்டையடித்து அவருக்கு புத்தாடைகள் வழங்கி தன்னுடைய வாட்ஸ் அப்பில் அவருடைய புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் மேலும் இந்த புகைப்படத்தில் உள்ளவர் யாரேனும் தெரியும் பட்சத்தில் தனக்கு தொடர்பு கொள்ளுமாறும் தொலைபேசி எண்ணை கொண்டு பதிவு செய்துள்ளார் இதனை கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவர் பார்த்து காவலர் கருப்பையா விற்கு தொடர்புகொண்டு அங்கு இருப்பவர் எங்களுக்கு தெரிந்தவர் தான் எனக் கூறினார் மேலும் தினகரன் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணி என்ற பெண்ணை தொடர்பு கொண்டு தங்களுடைய கணவர்தான் போல இருப்பதாகவும் அவர் தொலைந்து விட்டாரா என கேட்டபோது மணி தனது கணவர் காணாமல் போயி 14 ஆண்டுகள் ஆகிறது எனவும் அவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் விழுந்து பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அதனால் அடிக்கடி மருத்துவம் பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்று வருவார் எனவும் அப்போது தனக்கும் தனது மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது எனது கணவர் சின்னான் என்னை பார்க்க கள்ளக்குறிச்சி வந்துள்ளார் கள்ளக்குறிச்சிக்கு வந்து என்னை பார்த்துவிட்டு வீடு திரும்பாமல் 14 ஆண்டுகளாக காணாமல்போயுள்ளார் மேலும் தாங்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்ததாகவும் ஆனால் சின்னான் கிடைக்காமல் போய் விட்டதாகவும் மனைவி மணி தெரிவித்ததன் அடிப்படையில் தினகரன் மணி மற்றும் அவரது மகன் மகள் ஆகியோர் அழைத்துக்கொண்டு கீழ்குப்பம் காவல் நிலையத்தில் உள்ள சின்ன அணை பார்க்க சென்றபோது தனது கணவர் இவர்தான் என உறுதி செய்யப்பட்டு அவர் குடும்பத்துடன் சின்னான் அனுப்பிவைக்கப்பட்டார் கொரோனா காலத்தின்போது 14 ஆண்டுகள் கழித்து காணாமல் போனவரை மீட்டு தனது குடும்பத்தினருடன் ஒப்படைக்க வழியாக இருந்த காவலர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவிக்கின்றனர் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தலையிலும் முகத்திலும் முடி வளர்ந்து காணப்பட்டதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது தற்போது அவருக்கு சிகை அலங்காரம் செய்து உடை வாங்கி கொடுத்து உணவு வாங்கிக் கொடுத்து மூன்று மாதங்களாக பராமரித்து தனது குடும்பத்தினருடன் சேர்த்த காவலருக்கு உயர் அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This