26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

பக்தர்களுக்கு விபூதி அளிப்பதோ, பிரசாதம் தருவதோ, மந்திரிப்பது போன்ற எந்தச் செயலும் கிடையாது:  உறிகட்டி சுவாமிகள்

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...
    “சரி, போய்வா” என்பார் பிணிதீரும்… அற்புத சித்தர் உறிகட்டி சுவாமிகளின்           114-வது குருபூஜை இன்று!             உறிகட்டி சுவாமிகள்

 உறிகட்டி சுவாமிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் கிராமம் உள்ளது. இங்கு பைரவர் தனிக் கோயில் கொண்டருளிய திருத்தலமும் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் இந்த சேத்திரபாலபுரத்து இடுகாட்டைத் தவம் புரியும் இடமாக தேர்ந்தெடுத்து அதையே தனது இருப்பிடமாகக் கொண்டு 60 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது தவ நிலையை அறிந்து கொண்ட அவ்வூர் மக்கள் 1899 – ம் ஆண்டு சுவாமிகளை மயான பூமியிலிருந்து அழைத்து வந்து சேத்திரபாலபுரத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் தங்க வைத்தனர்.

                      உறிகட்டி சுவாமிகள்

                                                           உறிகட்டி சுவாமிகள்

சுவாமிகளின் பெயரோ, அவரது ஊரோ, அவரைப் பற்றிய விவரமோ ஏதும் அறியாத நிலையில் இருந்து வந்த ஊர் மக்கள், சுவாமிகளை நாடி சென்ற போது அவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கியுள்ளார். பைரவ ஷேத்திரமான அத்தலத்திற்கு வந்த சுவாமிகளை பைரவர் அம்சமென தெய்வமாக எண்ணி வணங்கினர். சுவாமிகளும் அவ்வூர் மக்களுக்குக் காவலாய் இருந்துள்ளார். அவ்வூர் மக்கள் நோய், நொடிகளுடனும், பிரசனைகளுடனும் சுவாமிகளிடம் வந்தால் அவற்றைக் கேட்டு “சரி, போய் வா!” என்பாராம். உடனே வந்தவர்களின் நோய் சரியாகிவிடும். அதுவே சுவாமிகளின் திருவாக்காகும். எல்லாம் சரியாகிடுமாம்.

வரும் பக்தர்களுக்கு விபூதி அளிப்பதோ, பிரசாதம் தருவதோ, மந்திரிப்பது போன்ற எந்தச் செயலும் சுவாமிகளிடம் கிடையாது.

சுவாமிகள் சேத்திரபாலபுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று உணவை யாசிப்பார். அவ்வூர் மக்கள் சுவாமிகளுக்குப் பிச்சை இடுவதற்கென்று உணவுடன் காத்துக் கொண்டிருப்பர். ஆயினும் சுவாமிகள் ஏதோ ஒரு வீட்டில் மட்டும் உணவைப் பெற்றுச் சென்று, சுவாமிகள் உண்டது போக மீதத்தை உறியில் கட்டித் தொங்க விட்டு விடுவார். ஆச்சரியமாய் அந்த உணவு இரண்டு, மூன்று நாட்களுக்குக் கெடாமல் அப்போது சமைத்த புதிய உணவு போல இருக்கும். அதனாலேயே சுவாமிகளை மக்கள் ‘உறிகட்டி சுவாமிகள்’ எனப் பெயரிட்டு அழைக்கலாயினர். சுவாமிகள் மிகக் கசப்பானதும், விஷத்தன்மை கொண்டதுமான எட்டிக் காயையும் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்.

பைரவர்

                                                    பைரவர்

சுவாமிகள் 1906 -ம் ஆண்டு பிங்கள ஆண்டு,கார்த்திகை மாதம், மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சேத்திரபாலபுரத்தில் ஜீவ முக்தி அடைந்தார். சுவாமிகளின் உடலில் சுவாசம் நின்றிருந்த போதிலும், உடலில் சூடு குறையாமலும், வியர்வை பெருக்கெடுத்தும் இருந்ததாம். சுவாமிகளின் உடலை இரண்டு நாள்கள் சுற்றுப்புற கிராமங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று சேத்திரபாலபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வட மேற்குப் புறத்தில் குழி தோண்டி சமாதி செய்வித்தனர்.

அவரின் சமாதிக்கு வந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய மகிமை நிறைந்த உறிகட்டிசுவாமிகளின் குருபூஜையை ஆண்டுதோறும் கிராம மக்கள் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று 01.12. 2020 கார்த்திகை 16 -ம் நாள் செவ்வாய்க்கிழமை 114 வது குருபூஜை விமர்சியாக நடைபெறுகிறது. ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசித்து குருவருள் பெற்றுவருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This