125 வகையான உணவுகளை சமைத்து பிரமாண்ட விருந்து அளித்து அசர வைத்த மாமியார்!!

புதுமாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து அசர வைத்த மாமியார்

                                                  125 வகையான உணவுகள்
ஆந்திராவில் புதிதாக திருமணம் ஆன மருமகனுக்கு விருந்து வைப்பதில் பலர் பிரமாண்டத்தை காட்டி அசர வைப்பது வழக்கம். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமா வரத்தில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 125 வகை உணவுகளை சமைத்து கொடுத்து அசத்தினார்.

இந்த வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. அதில் டைனிங் டேபிளில் புதுமாப்பிள்ளை அமர்ந்து இருக்க அதில் 125 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அடுக்கி வைத்துள்ளார். 125 வகையான உணவுகளை பார்த்த புதுமாப்பிள்ளை மிகவும் வியந்து போனார்.

தனது மனைவியுடன் அமர்ந்தபடியே ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசி பார்த்து சாப்பிடுகிறார். அப்போது புதுமாப்பிள்ளை உணவை ஊட்டிவிட முயற்சிக்கிறார். அதற்கு அந்த புதுப்பெண் வெட்கத்துடன் வேண்டாம் மாமா என்கிறார்.

இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.