11 பெண்களை ஏமாற்றி திருமணம்..! முதலிரவில் 23 வயதான வாலிபர் கைது..

சென்னை அருகே 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம், நாகர்கோவில் சுஜி வழக்குகளை தொடர்ந்து சென்னையை அதிரவைத்துள்ளது மேலும் ஒரு சம்பவம். திருமணம் செய்துகொண்ட பெண்ணிடம் முதலிரவில் காட்டு மிராண்டி தனத்துடன் நடந்துகொண்ட வாலிபர் கைதான பின்னர், கொடுத்த வாக்குமூலம் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் 23 வயதான வாலிபர் லவ்லி கணேஷ்.இவர் அண்மையில் 20 வயதான கொளத்தூரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இருவரும் வில்லிவாக்கத்தில் வாடகை வீடெடுத்துள்ளனர். முதலிரவு அன்று மனைவியை கணேஷ் கடுமையாக சித்திரவதை செய்துள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக உறவு வைத்துக்கொள்ள இணங்க செய்தும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, இளம்பெண் சம்மதிக்காததால் அவரை கணேஷ் அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கணேஷின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண், வீட்டின் உரிமையாளரின் உதவியுடன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கணேஷை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில், கணேஷை விசாரித்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டுமில்லாமல், லவ்லி கணேஷ் ஏற்கனவே அடுத்தடுத்து 11 பெண்களை காதலித்து திருமணம் செய்தது அம்பலாமாகியது. காதலிக்கும் போது, பெண்களிடம் உல்லாசமாக இருக்கும் நேரங்களில் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வதும், அவற்றை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் கணேஷ்.

மேலும், காதலிகளை தனது நண்பர்களிடம் உறவு வைத்துக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். கணேஷின் வலையில் சிக்கிய பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார், இன்னும் எத்தனை பெண்கள் அவரால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் மீது பெண் வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர்.