வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் கேரளாவில் இருந்து 400 விவசாயிகள் பங்கேற்பு !!

ராஜஸ்தானில் நடந்து வரும் போராட்டத்தில் கேரளாவில் இருந்து 400 விவசாயிகள் பங்கேற்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின் ஷாஜகான்பூரில் கடந்த சில வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சன்யுக்த் கிசான் மோர்ச்சாவை சேர்ந்த இந்த விவசாயிகள் நெடுஞ்சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு அமர்ந்திருப்பதால் அந்த வழியாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்துக்கு கேரளாவை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி கேரளாவை சேர்ந்த சுமார் 400 விவசாயிகள் ஷாஜகான்பூரில் நடந்து வரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. அம்ரா ராம் தெரிவித்தார். விவசாயிகள் கடும் குளிரிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கூறிய அவர், எனினும் மத்திய அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.