வேப்பம் பொடியின் பயன்கள் !!

ஆயுர்வேதத்தில் வேப்பம் தூள் பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வேப்பம் பொடி எளிதாக வீட்டிலும் தயாரிக்க கூடிய பொருள். எளிமையாக கிடைக்க கூடிய விலையில்லா வேப்பிலை உடலில் பலவிதமான குறைபாடுகளுக்கு தீர்வளிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்ப இலை, அவ்வபோது பயன்படுத்த வேப்பம் பொடி தயாரித்து பயன்படுத்துவதுண்டு. இது உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யகூடியது. இந்த வேப்பம் பொடியின் நன்மைகள் குறித்து தெரிந்துகொண்டால் இனி நீங்களும் பயன்படுத்தலாம்.
வேப்பம் பொடி என்பது வேப்பிலையை சுத்தம் செய்து காம்புகள் நீக்கிய பிறகு நன்றாக அலசி நிழலில் உலர்த்த வேண்டும். இதை இடித்து மிக்ஸியில் மைய அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன்படுத்த வேண்டும். வேப்ப இலைகளில் குர்செடின் மற்றும் சிட்டோஸ்டெரால் போன்ற ஃப்ளவனாய்டுகள் உள்ளது. இது பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

​ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது

வேப்பம் பொடி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் வலுவாக உள்ளது. இதன் பொடியில் இருக்கும் ஃப்ளவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டு, அழற்சி எதிர்ப்பு உடல் உறுப்பு மற்றும் கிளைக்கோசைடுகளின் நன்மைகள் ரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துகிறது. அதே போன்று ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறது.

வாய் வழி கிருமிகளை தடுக்கும்

நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் சுவாசத்தை காட்டிலும் அதிகமாக வாய்வழியாகத்தான் செல்கிறது. உடலில் கிருமித்தொற்றை உருவாக்கும் முதல் இடம் வாய் வழி தான். வாய்ப்பகுதி சுகாதாரம் வேப்பம் பொடியில் மேம்படுகிறது. வேப்பம் பொடியின் உமிழ்நீரில் பிஹெச் அளவு பராமரிக்க உதவுகிறது. சிலர் காலையில் சில வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவார்கள்.

 

ஆயுர்வேதத்தில் பற்பசைகளில் வேம்பு முக்கியமானதாக பயன்படுத்தப்படுகிறது. பல் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஜெல்களில் வேப்ப இலையும் உள்ளது. இதிலுள்ள வலுவுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாவை தடுக்க கூடும். பல் சிதைவை குறைக்கும். பல் வலி உபாதையை தடுக்கும்.