26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீதம் தேர்ச்சி

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.

இந்த தேர்வை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் இருந்து 5,845 மாணவ- மாணவிகளும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இருந்து 7,234 மாணவ- மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து 8,654 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் இருந்து 3,653 பேரும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 6,215 பேரும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து 5,644 பேரும் எழுதினர்.

வர்களில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 5,076 மாணவ- மாணவிகளும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 6,370 மாணவ- மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 7,675 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 3,179 பேரும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 5,079 பேரும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 5,018 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

ஆக மொத்தம் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 17,601 மாணவர்களும், 19,644 மாணவிகளும் என 37,245 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,670 மாணவர்களும், 17,727 மாணவிகளும் என 32,397 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 86.98 ஆகும்.

இதன் மூலம் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதமான 85.85 சதவீதத்தை விட இந்த ஆண்டு 1.13 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் பெரிய அளவில் உயராவிட்டாலும் சராசரியாக 1 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்து கொண்டு வருகிறது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.13 சதவீதம் அதிகரித்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே சற்று திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Plus 2 Result News 17.07.2020
Plus 2 Result News 17.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This