கள்ளக்குறிச்சி பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளது இதில் ஆட்டிறைச்சிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.குறிப்பாக கச்சிராயபாளியம் சாலை, அண்ணா நகர் பகுதி ஆகிய இடங்களில் உள்ள ஆட்டிறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு செல்வது குறைந்துள்ளது.ஞயிற்று கிழமைகளில் மட்டுமே இறைச்சி கடைகளுக்கு குவிவதால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இறைச்சி கடைகாரர்கள் பதபடுத்தபட்ட இறைச்சிகளாய் விற்ப்பனை செய்வதாக புகார் எழுந்தது .அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் இறைச்சி கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் கச்சிராயபாளையம் சாலை கே பி ஆர் நகர் அருகே உள்ள இறைச்சி கடையினுள் வைக்கபட்டிருந்த குளிர் சாதன பெட்டிகளில் ஆட்டிறைச்சி பதபடுத்தபட்டுள்ளது தெரியவந்தது .இதனை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் உள்ளனர்..