26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

வாலிபரை கொன்று உடலை எரித்த கொடூரம் – ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் பெங்களூரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் இவருக்கும் இவரது சொந்த ஊரைச்சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்து வந்த நிலையில் பாலமுருகன் தனது மனைவியை கிராமத்திலேயே தங்க வைத்துவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுவட்டு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8- மாதங்களுக்கு முன் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற பாலமுருகன் தனது குழந்தையை பார்த்தவுடன் குழந்தை தன்னைப்போல் இல்லை எனவும் ஏற்கனவே மணிமேகலைக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சிலர் கூறியதால் சந்தேகத்துடன் இருந்த பாலமுருகன் குழந்தை என் உருவத்தைப் போல் இல்லை எனவும் மணிகண்டனைப் போல் இருப்பதாகவும் கூறிவிட்டு கோபத்தில் யாரிடமும் பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு மூன்று மாதங்களாக பாலமுருகனை நேரில் பார்க்க முடியாமலும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்ததால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருக்கோவிலூரை அடுத்துள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகனின் சகோதிரியின் கணவர் கோவிந்தராஜ் என்பவர் தனது மைத்துனரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் பாலமுருகனின் குடும்பத்தினர் மற்றும் பாலமுருகன் மனைவி மணிமேகலையிடமும் விசாரனை மேற்கொண்டும் சரியான துப்பு கிடைக்காததால் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்ததில் மணிமேகலைக்கும் – மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மணிகன்டனை காவல் நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரனை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் பாலமுருகன் சந்தேகப்பட்டு சண்டை போட்டு கிளம்பி விட்டான் எனவும் இனியும் உயிரோடு விட்டு வைத்தால் நமது கள்ள காதலுக்கு இடையூறாக இருப்பான் எனவே தீர்த்து கட்டி விட வேண்டும் எனவும் மணிமேகலை தொலைபேசியில் கூறியதையடுத்து அன்று இரவு பேருந்தில் இருந்து இறங்கி வந்த பாலமுருகனை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டில் நுழைந்து பாலமுருகனை சுவற்றில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார் மணிகண்டன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பித்தளை பத்திர்த்தாலும் , சுக்தியாலும் கடுமையாக தாக்கியதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பரிதாபமாக. உயிரிழந்துள்ளார். பாலமுருகன் இறந்ததை உறுதி படுத்தி கொண்ட மணிகண்டன் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்று தனது சகோதரர் தனசேகரிடம் நடந்தை கூறி TVS – 50 இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று சடலத்தை சாக்கு பையில் கட்டி அதிகாலையில் அங்குள்ள இடுகாட்டில் எரித்து எலும்பு களை பெரிய கற்களை கொண்டு நொறுக்கி சாம்பலை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து திருநாவலூர் போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This