கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார் இந்த நிலையில் ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது அதேபோல தற்காலிக கலைக்கல்லூரி ஆனது ரிஷிவந்தியத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரியலூர் பகுதியில் தற்காலிகமாக துவங்கப்பட்டுள்ளது எனவே ரிஷிவந்தியம் பகுதி மக்கள் தங்களுடைய ரிஷிவந்தியம் தொகுதியை
தலைமை இடமாக இருக்கக் கூடிய ரிஷிவந்தியம் மையப் பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க கோரியும் தற்காலிக கல்லூரியையும் ரிசிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் நடத்தக் கோரியும் இன்று ஒரு நாள் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி வீடு வீடாக போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அக்கிராமத்தில் உள்ள சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக ரிஷிவந்தியம் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி வந்து ரிஷிவந்தியம் முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனவே பொதுமக்களின் கோரிக்கையாக அரசு கலைக் கல்லூரியை ரிசிவந்தியம் மையப் பகுதியிலேயே அமைக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்