26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கொரோனா பரவிய தெருக்களில் தடுப்புகள் அமைப்பு

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கடந்த 50 நாட்களாக நோய்த்தொற்று பரவாமல் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்து உள்ளனர் இதனால் நோய்த்தொற்று மிக வேகமாக பரவி உள்ளது.

இதில் வட மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களை மூங்கில்துறைப்பட்டு, அத்திப்பாக்கம் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்து அதன் பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மையனூரில் 1, மரூர் மேட்டூரில் 1 கர்ப்பிணி உள்பட 6, ஈருடையாம்பட்டில் 6, பக்கம் 1, பொற்பலாம்பட்டு 1, பள்ளிப்பட்டு 1, ஜம்பை 2, பகண்டை கூட்டு சாலை 2 என மொத்தம் 20 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள கொரோனா நோய் தொற்று முகாமில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து பகண்டை கூட்டு சாலையில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியை சங்கராபுரம் வட்டாட்சியர் நடராசன், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், அரியலூர்  குறுவட்ட ஆய்வாளர் தனசேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், வாணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், பகண்டை கூட்டு சாலை தனிப்பிரிவு காவலர் சுந்தர், ஊராட்சி செயலர் சக்திவேல், உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Corona News 21.05.2020
Corona News 21.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This