ரஹானேவுக்கு மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு!!

ரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு

                                                                       ரஹானே
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. கடைசி 3 போட்டிகளிலும் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். மூன்றில் இரண்டில் வெற்றிபெற்று, ஒரு போட்டியை டிரா செய்து இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.
இந்திய அணி தொடரை கைப்பற்ற ரஹானேயின் பேட்டிங்கும், கேப்டனாக அவரது செயல்பாடும்தான் முக்கிய காரணம்.
இந்திய அணி வீரர்கள் இன்று இந்தியா வந்தடைந்தனர். அதன்பின் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். ரஹானே மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டிற்குச் சென்றார். அப்போது அவர் வீடு இருக்கும் அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, சிகப்பு கம்பளம் விரித்து பூக்கள் தூவி பிரமாண்டமாக வரவேற்றனர். அவரரை வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.