மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- விவசாயி பலி..

கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- விவசாயி பலி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி தாடாளன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சீர்காழியில் இருந்து பழையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஓலகொட்டாய்மேடு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே எருக்கூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் மகன் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந் சிவராஜ் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விவசாயி ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.