மேலும் 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு…

Computer image of a coronavirus

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று இந்தியாவிலும் தொடர்ந்து பலரிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இது உறுதியாகிறது. நேற்று வரை இந்தியாவில் 114 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 2 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உருமாறிய இந்த கொரோனாவால் ஏற்படும் சூழல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.