சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கப்பனூர் ஏரிக்கரையில் மதுவிலக்கு சம்மந்தமாக தனிப்படை போலிசார் கண்காணித்து வந்தனர்.அப்போது சாக்கு மூட்டையை தலையில் சுமந்தவாறு அவ்வழியாக வந்தவரை மடக்கி பிடித்து தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொள்ள முயன்ற போது தப்பி செல்ல முயன்றுள்ளார்.அவரை வளைத்து பிடித்து போலிசார் விசாரணை மேற்கொண்டதில்.அவர் மல்லாபுரத்தை சேர்ந்த ராமசந்திரன் என்றும் .அவர் ஒரு சந்தன மரத்தை 20 துண்டுகளாக வெட்டி சாக்கில் எடுத்து வந்தது தெரியவந்தது.மேலும் அவரிடமிருந்து விற்ப்பனைக்காக கொண்டு செல்லபட்ட 20 சந்தனை கட்டைகளை பறிமுதல் செய்து அவனை கைது செய்தனர்.மேலும் கைதான ராமசந்திரன் திருப்பத்தூர்,வேலூர்,திருவண்ணாமலை போன்ற சந்தன கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் எனவும் தெரியவருகிரது.அதன் பிறகு கைது செய்த ராமசந்திரன் மற்றும் பறிமுதல் செய்யபட்ட 20 சந்தன கட்டைகளை வடபொன்பரப்பி போலிசாரிடத்தில் தனிப்படை போலிசாரிடத்தில் ஒப்படைத்தனர்.