26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

முதல்வர் பாதுகாப்பு பணி போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

தமிழக முதல்வரின், கார் பயணம் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.

முதல்வர் பழனிசாமி, கடந்த 10ம் தேதி சென்னையிலிருந்து சேலத்திற்கு நான்கு வழிச்சாலையில் காரில் சென்றார். இதனையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, முதல்வர் காரை, திடீரென ஒரு வேன் முந்திச் சென்றது. இதுகுறித்து எஸ்.பி., ஜெயச்சந்திரன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.இந்நிலையில் நாளை 14ம் தேதி மீண்டும் கார் மூலம் சாலை வழியாகவே சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்புகிறார்.

இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் குளறுபடி ஏற்படாதபடி நான்கு வழிச்சாலையில் வளைவு, கிராசிங், கிராமப் புறங்களுக்கு செல்லும் சாலை மற்றும் பைபாஸ் சாலைகளில் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்வது குறித்து எஸ்.பி.,ஜெயச்சந்திரன், மாடூர் டோல்கேட்டில் நேற்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது, மூன்று டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். மேலும், பாதுகாப்பு பணி தொடர்பாக ஒத்திகை நடத்தி முதல்வர் பயண வழித்தடத்தில் பணியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளார்.

Sp News 13.06.2020
Sp News 13.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This