மாஸ்டர் படத்தின் வசூலால் மிரண்ட திரையுலகம்!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வசூலில் உலகளவில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.  கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளியாகும் முதல் பெரிய நடிகரின் படம் என்பதால் விடுமுறை நாட்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனிடையே மாஸ்டர் திரைப்படம் சென்னையில் மட்டும் 5 நாட்களில்  ரூ.5.43 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரூ.82 கோடி வசூலாகி உள்ளதாகவும்  கூறப்படுகிறது. சென்னையிலும் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது.

மேலும் உலகளவில் மாஸ்டரின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் #MasterGloballyNo1 என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.