கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இரண்டாக பிரிக்கபட்டு முதல் சுதந்திர தின விழா இன்று கொண்டாட படுகிறது.புதிய மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்ற ஆட்சியர் கிரான் குராலா கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 74 வது சுதந்திர விழாவில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டார் அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்கள் ,வருவாய் துறையினர் ,நகராட்சி நிர்வாகிகள் ,சுகாதார துறையினர் என பலருக்கு சான்றிதழ்களை அளித்தார் அதன் பிறகு காவல் துறையின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் முன்னால் அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்