மடிக்கக்கூடிய ஐபோன்: ஆப்பிள் நிறுவனம் !!

மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்?

                                                                           ஆப்பிள்
சாம்சங், எல்ஜி மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிகளவு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களுக்கான ப்ரோடோடைப்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கென மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை வாங்கி, நீண்ட காலத்திற்கு அவை எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.
 சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப்
இந்த டிஸ்ப்ளேக்கள் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் உள்ளதை போன்று கண்களுக்கு தெரியாத ஹின்ஜ் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிள் இதுவரை முழுமையான மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களை சோதனை செய்து வருவதால், இது விற்பனைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். மேலும் இந்த திட்டத்தை ஆப்பிள் எதிர்காலத்தில் ரத்து செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.