போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடி!!

123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்

                                                     வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர்
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தெடாங்கியது. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இழந்தது 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற பரிதாபத்தில் இருந்தது.
7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் நான்குமுனை பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இருவரும் அபாரமாக விளையாடினர்.
வாஷிங்டன் சுந்தர் 144 பந்தில் 62 ரன்களும், ஷர்துல் தாகூர் 115 பந்தில் 67 ரன்களும் விளாசினர்.
இந்த விக்கெட்டை ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. புதுப்பந்தை எடுத்த பின்னரும் பலன் இல்லை. இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியாக 309 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாகூர் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.
இந்த ரன்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் தோல்வி உறுதியாகியிருக்கும். போட்டியில் விறுவிறுப்பு இருந்திருக்காது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 336 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 33 ரன்கள்  மட்டுமே ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது.
நாளை  முழுவதும் விளையாடி300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றியை எதிர்நோக்க முடியும். இல்லையெனில் இந்தியாவுக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படும்.
ஒட்டுமொத்தமாக இருவரும் போட்டியை உயிரோட்டமாக வைத்திருந்தனர் என்றால் அதை மிகையாகாது,