கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி.இவர் பி ஏ ஆங்கிலம் பட்டதாரியான இவர் தற்காலி கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவர் சிலம்பம் ,கராத்தே ,கிட்பாக்சிங்க் ,குத்துசண்டை ,ஸ்கிப்பிங் ,நிங்க்சாக் போன்ற பல்வேறு வகையான தற்காப்பு கலைகளை தானும் கற்று பிறருக்கும் கற்றும் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.முக்கியமாக இளைஞ்சர்கள் மற்றும் மாணவர்களுக்கு இக்கலையை இலவசமாக ஊர் ஊராக சென்று கற்று கொடுத்து வரும் இவரை க்ண்டு இவருடன் மேலும் இரு தற்காப்பு கலை ஆசிரியர்கள் இனைந்து கொண்டனர்.இலவசமாக அரசு பள்ளிகளுக்கு சென்று கற்று கொடுத்து வந்த ஆசிரியர்கள் தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடபட்டது.இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஊருக்கே சென்று தினமும் கற்றும் கொடுக்கும் பணியில் ஈடுபட முயற்ச்சித்துள்ளார் .இதற்க்கு அனைவரின் மத்தில் பெறும் வரவேற்ப்பை பெற்றது.இவரிடம் தற்காப்பு கலைகளை கற்று கொள்ளும் மாணவி தெரிவிப்பது இந்த ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு பயணுள்ளதாகவும் இலவசமாகவும் தற்காப்பு கலைகளை கற்று கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் பெண்கள் தற்காப்பு கலைகள் கற்று கொள்வது அவசியமென்றும் தனக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்று கொடுக்கும் ஆசிரியருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்
மேலும் தற்போதை காலத்தில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்து கொண்டே செல்வதாகவுக்ம் அது போல பெண் பிள்ளைகள் கடத்தபடுப்வது ,அவர்களிடத்தில் இருந்து வழிப்பறி செய்வது போன்ற பல பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெறுவதால் அதனை தடுக்கவே பெண்களுக்கு முக்கியதுவம் அளிக்கபட்டு இலவசமாக தற்காப்பு கலைகள் கற்று கொடுக்கபட்டு வருகிறதாக தற்காப்பு கலை ஆசிரியர் கூறியுள்ளார் .மேலும் பெண்கள் அணிந்து செல்லும் ஷால் மூலம் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என பல்வறு தடுப்பு வழிகளை கற்று கொடுத்து வருப்வதாகவும் ஆசிரியர் சூரிய மூர்த்தி தெரிவித்துள்ளார் .மேலும் தான் இலவசமாக கர்று கொடுக்கும் இந்த தற்காப்பு கலைகளை மாவட்டத்தில் எவ்விடத்திலிருந்து அழைப்பு வந்தாலும் நேரடியாக சென்று இலவசமாக கற்று கொடுப்பேன் தெரிவிக்கிறார் ஆசிரியர் சூரியமூர்த்தி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் கவனம் கொள்ளும் ஆசிரியன் முயற்சியில் மேலும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் இளைஞர்களும் இதனை ஆர்வமாக கற்று கொள்கின்றனர் .குறிப்பாக பாக்சிங்க் ,சிலம்பம் ,ஸ்கிப்பிங்க் பொன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் தங்களுடைய ஆசிரியர் போல ஸ்ப்பிங்க் ரோப் மூலம் ஒரு சுற்றுக்குள் 6 முறை குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிரார் அதே போல ஒவ்வொரு மானவரும் ஒவ்வொரு கலைகளில் சாதனை படைக்க வேண்டுமென தற்காப்பு கலைகளை கற்று வருவதாக மக்ழ்ச்சி தெரிவிக்கிறார்..மானவர் பிரகதீஷ்
இது போல தற்காப்பு கலைகளில் பல விதமான கலைகளை கற்று கொடுத்தும் தானும் கின்னஸ் சாதனையில் இடம் பெற போராடி வரும் தற்காப்பு கலை ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்களோ ஏராலம்..