புதிய ரெனால்ட் கைகர் மாடல்!!

ரெனால்ட் கைகர் புது டீசர் வெளியீடு

                                                                       ரெனால்ட் கைகர்
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசரில் புதிய மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
டீசரின் படி 2021 ரெனால்ட் கைகர் மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இது சி வடிவ ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
 ரெனால்ட் கைகர்
இந்த மாடலில் டோ-ஸ்லாட் கிரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரெனால்ட் லோகோ எல்இடி டெயில் லைட்களின் கீழ் பொருத்தப்படுகிறது. புதிய ரெனால்ட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 76 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யுவி300 மற்றும் போர்டு இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.