ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்
டது.சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரிஷிவந்தியம் பாசார் கிராமத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் ஒருவருக்கும், அலியாபாத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவருக்கும், பகண்டைகூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் கணிப்பொறி பிரிவில் தற்காலிகமாக பணிபுரியும் லா.கூடலுாரைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.உடன் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கண்டறியப்பட்டு, அவர்களது உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டது.