கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்2 மறு தேர்வில் விண்ணப்பித்திருந்த 28 பேரில் 18 பேர் தேர்வு எழுதினர். 10 பேர் ஆப்சென்ட் ஆகினர்.கள்ளக்குறிச்சியில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பிளஸ் 2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு நேற்று தேர்வு நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுக்கு கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 12 பேர், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 16 பேர் என 28 பேர் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தனர்.இதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, சின்னசேலம் பாரதி பள்ளி, பெருமங்கலம் அரசு பள்ளி என மூன்று மையங்களிலும், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் வித்யா பாரதி, ஞானானந்தா, அரசு பெண்கள் பள்ளி என மூன்று மையங்களிலும் நேற்று தேர்வு நடந்தது.இதில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 12 பேரில் 7 பேரும், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 16 பேரில் 11 பேரும் பங்கேற்றனர். 10 பேர் தேர்வில் பங்கேற்காத நிலையில் 18 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த தேர்வினை சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., கார்த்திகா ஆகியோர் பார்வையிட்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பஸ்கள் இயங்காததால், கள்ளக்குறிச்சி பகுதியில் தங்கியிருந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இவர்களுக்கு உதவிடும் வகையில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கிருஷ்ணபிரியாவின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கியது.இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் நடந்த தேர்வில் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 2 பேர் மட்டும் நேற்று நடந்த மறுதேர்வில் பங்கேற்றனர்.
Must Read
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
- Advertisement -
Latest News
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
- Advertisement -
More Articles Like This
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை…
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி...
95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை!!
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்கள் தெர்மல் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
...
நண்பர்கள் ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி : மாணவர்கள்!!
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
...
பள்ளியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் :முதன்மை கல்வி அதிகாரி தலைமையில்!!
சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள்...