பா ரஞ்சித் பட வாய்ப்பை தவற விட்டேன் – வருந்தும் நடிகர் பிரவீன் …

‘அட்டகத்தி’ பட வாய்ப்பை தவற விட்டேன் - வருந்தும் நடிகர் பிரவீன்

                                                                      அட்டகத்தி
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. இதில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அட்டகத்தி படத்தை தவற விட்டதாக நடிகர் பிரவீன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் இதுவரை 25 குறும் படங்களில் நடித்திருக்கிறேன். பத்திற்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தற்போது ட்ரிப் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். இதற்கு முன் பல படங்களில் நேர்முக தேர்வுக்கு சென்றிருக்கிறேன்.
பிரவீன்
அப்படி சென்ற படம் தான் அட்டக்கத்தி. இதில் நான் தேர்வாகியும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அட்டகத்தி படத்தை தவற விட்டது எனக்கு மிகுந்த வருத்தம். இருப்பினும் என்னுடைய விடாமுயற்சியால் தற்போது ட்ரிப் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன்.
ட்ரிப் படத்தில் கதாநாயகியாக சுனேனா நடித்திருக்கிறார். டெனிஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் தைப்பூசத்தன்று (ஜனவரி 28) வெளியாகிறது. வழக்கமான படம் போல் இல்லாமல் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த ட்ரிப் பிடிக்கும் என்றார்.