பணம் வைத்து சூதாட்டம் : கைது செய்த போலீசார் !!

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பீமணப்பள்ளி ரமேஷ் (வயது 30), செட்டிப்பள்ளி லோகேஷ் (39), அலசப்பள்ளி சக்கரலாப்பா (44), அத்திமுகம் சிவா (35) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.