நண்பர்கள் ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி : மாணவர்கள்!!

பள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்

                                                              பள்ளி வகுப்பறை
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது.