26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

நடப்பு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடப்பு காரீப் பருவத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் கிரண்குராலா அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையில் கடன் வழங்கும் வங்கிக்கு விருப்பக்கடிதம் வழங்கி காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் அல்லது விவசாயிகளின் கணக்கு வைத்துள்ள வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.நெல் சொர்ணவாரி, மக்காச்சோளம், கம்பு, வேர்க்கடலை, மஞ்சள், மிளகாய் பயிர்களுக்கு வரும் ஜூலை 31ம் தேதியும் மரவள்ளி, பருத்தி பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும். மக்காச்சோளம் 330 ரூபாய், வேர்க்கடலை 532, மஞ்சள் 1,899, மரவள்ளி 1,334 ரூபாய் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும்.

கிராமத்தில் கணக்கிடப்படும் சராசரி மகசூல் இழப்பு அடிப்படையில் இழப்பு ஏற்பட்ட கிராமத்தில் இழப்பிற்கு ஏற்றவாறு காப்பீடு தொகை வழங்கப்படும்.மாவட்டத்தில், மானாவாரி பயிரில் விதைக்க இயலாமல் போவதற்கான இழப்பீடு கணக்கிடுவதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்ட் 8ம் தேதி, விதைப்பு செய்து பயிர் இழப்பு கணக்கிடுவதற்கு காலக்கெடு ஆகஸ்ட் 14 ம் தேதி என மாவட்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடப்பு காரீப் பருவத்தில் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்திட அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பருவநிலை மாற்றம், எதிர்பாராத வகையில் புதிய வகை பூச்சிநோய் தாக்குதல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Kallakurichi Collector News 13.06.2020
Kallakurichi Collector News 13.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This