26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

தொடருமா ஊரடங்கு ? மே 31 க்கு பிறகு என்ன செய்ய போகிறார்கள் !

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பஸ், ரயில் போக்குவரத்து துவங்கவில்லை. ஊரடங்கு காரணமாக, ஒரு மாவட்டத்திலிருந்து, மற்ற மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம் போன்றவற்றுக்கு மட்டும், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்ற மாவட்டத்திற்கு செல்ல, ‘இ — பாஸ்’ வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள், சொந்த மாவட்டத்தில் இருந்து, வேலை செய்யும் மாவட்டத்திற்கு, செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் உள்ளனர்.
ஆனால், கொரோனா நோய் பரவல், சென்னை உள்ளிட்ட, சில மாவட்டங்களில் மட்டும், தினமும் அதிகரித்தபடி உள்ளது.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., சென்னை தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கு முன், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், மூன்று முறை ஆலோசனை நடந்தபோது, மருத்துவக் குழு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களின் பரிந்துரை விபரத்தை வெளியிட்டனர்; நேற்று, அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.
நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்வது; மருத்துவப் பரிசோதனை தொடர்பாக செயல்படுத்த வேண்டிய, புதிய உத்திகள்; மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள்; இறப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும், நோய் தொற்றால், எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களைக் கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்; தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து, தமிழகத்தில், குறிப்பாக சென்னை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மருத்துவ நிபுணர்கள் குழுவினர், முதல்வரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில், ஜெனிவாவிலிருந்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்; ஈரோட்டிலிருந்து, இந்திய மருத்துவக் கழகத் தலைவர் ராஜா; வேலுாரிலிருந்து, கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி இயக்குனர் பீட்டர் ஆகியோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக ஆலோசனைகள் வழங்கினர்.

கல்வித் துறையினருடன்முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனான ஆலோசனை முடிந்த பின், கல்வித் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்தது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு; வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு, ‘இ — பாஸ்’ வழங்குவது; ஆசிரியர்களை அழைத்து வருவது; பள்ளிகள் திறப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை, ஆகஸ்ட் மாதம் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 

SOURCE : நன்றி தினமலர்

 

Coronavirus Mosaic Tamil Nadu State Map With Grunge Stamps
Coronavirus Mosaic Tamil Nadu State Map With Grunge Stamps

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This