தொடங்கியது அமேசான், பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை!!

 

ஒவ்வொரு ஆண்டும் விஷேச தினங்கள் வரும்போது ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் ‘Great republic day sale’ என்ற பெயரிலும், ஃபிளிப்கார்ட்டில் ‘Big Saving Days sale’ என்ற பெயரிலும் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கேமராக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மேலும் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகையும் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை அனைத்து மாடல்களுக்கும் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி சலுகை, எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி ஆகியவை கிடைக்கும். இந்த சிறப்பு விற்பனை அமேசானில் ஜனவரி 23 வரையும், ஃபிளிப்கார்டில் ஜனவரி 24 வரையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.