26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பெண் ஒருவருக்கு கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அரகண்டநல்லூர் அருகே உள்ள திருக்கோவிலூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறையினரிடமும் சுகாதார துறையினரிடமும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு செய்தார். புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 6 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Collector Kiran Kurala
Collector Kiran Kurala

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினசரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.திருக்கோவிலூர் பகுதியில் இது வரை கொரானா பாதிப்பு இல்லாத நிலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவில் அருகாமையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பெண் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து அருகாமையில் உள்ள திருக்கோவிலூரில் காவல்துறையினர், சுகாதார துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சுகாதார துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திடீரென நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அரகண்டநல்லூர் திருக்கோவிலூரை இணைக்கும் மேம்பாலத்தில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தார்.மேலும் அரகண்டநல்லூர் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களை உரிய காரணத்திற்காக மட்டும் அனுப்ப வேண்டும் என கூறினார்.மேலும் சுகாதார துறையினரிடம் அனைத்து தரப்பு மக்களையும் தினசரி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எவருக்கேனும் காய்ச்சல், சளி உள்ளிட்டவைகள் இருந்தால் உடனடியாக அவர்களது இரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This