திருக்கோவிலூரில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், திருக்கோவிலூரில், டி.எஸ்.பி., ராஜீவ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன், சுந்தர்ராஜன் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாகப் பிரிந்து ஐந்து முனை சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு, தீயணைப்பு நிலைய பிரிவு சாலை, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. 200க் கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரே நேரத்தில் நகர் முழுதும் 5 இடங்களில் வாகன சோதனை நடந்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.