அரகண்டநல்லுார் அருகே அந்திலி-நெற்குணம் சந்திப்பு சாலையில் எஸ்.பி., தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பைக்கில் மது பாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், கீழக்கோண்டூரைச் சேர்ந்த தனக்கண்ணு, 55; என தெரியவந்தது. உடன் அவரையும் அவரிடமிருந்து 100 மது பாட்டில்கள் 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து, அரகண்டநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், தனக்கண்ணு மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.