தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், பெரும்பாலான கிராமங்களில் உள்ள கரும்பு வயலில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் கரும்பு பயிரில் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் அதனை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக போதிய தண்ணீர் இன்றி வாடிய நிலையிலிருந்த கரும்பு பயிர்கள் புத்துணர்ச்சி பெற்று பசுமையாக காணப்படுகிறது. பயிர்கள் வாடும் தருணத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் மரவள்ளி கிழங்கு, வேர்கடலை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போதைய மழை நல்ல ஊட்டத்தைக் கொடுத்துள்ளது. நீர் நிலைகளின் பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கியது. தகுந்த பருவத்தில் மழை பெய்துள்ளதால் மானாவாரி பயிர் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.