திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்-அமைச்சரை அவதூறாக பேசிவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது தமிழக முதல்-அமைச்சரைப்பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழர் திருநாளான பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. தி.மு.க. மக்கள் சபை கூட்டம் என்று பொய்யான பிரசாரம், பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார்கள். தி.மு.க.வின் நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வின் சகாப்தம் முடிந்து விடும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் அய்யம்பெருமாள், அய்யப்பா கிருஷ்ணமூர்த்தி, கதிர்தண்டபாணி, அருணகிரி, அரசு, தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் செந்தில்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்தோஷ், சேகர், மணிராஜ் பழனிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, வக்கீல் பிரிவு பொருளாளர் வெற்றி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அய்யந்துரை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.