தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது..

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது

                                                   தலைமைச் செயலகம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2-ந்தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சபை கூடும். அதன்பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆளுநர் உரையின் மீதான விவாதம், பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெறும். கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பகு குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.