தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.