சின்னசேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை சப் – கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனிமை படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டது. இங்கு அரசு அனுமதியுடன் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.இதையொட்டி மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் மஸ்கட், துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு வந்த 57 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால், அவர்களை வாசுதேவனுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் தனிமை படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 12 பேரின் உமிழ்நீர் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதனையடுத்து, கள்ளக்குறிச்சி சப் – கலெக்டர் ஸ்ரீகாந்த், கொரோனா பாதித்த நபர்களை நேற்று பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், இருப்பிட வசதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் தாசில்தார் வளர்மதி, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
Updated:
தனிமைபடுத்தப்பட்ட வார்டில்சப் – கலெக்டர் திடீர் ஆய்வு
Must Read
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
- Advertisement -
Latest News
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...