தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

                                                     அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.