சன் ரைசர்ஸுக்காக அவரது கேப்டன் என்ற முறையில் கூறுகிறேன், அவர் ஒரு நல்ல பவுலர், மிக நல்ல பவுலர். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நன்றாக வீச என் வாழ்த்துக்கள்
நடராஜன் – வார்னர்
தங்கராசு நடராஜன் டெஸ்ட் வாய்ப்பு பெறுவதற்கு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் சீரான முறையில் லெந்த்தில் வீச முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்தார்.
ஏனெனில் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து ஓவர்கள் வீச வேண்டும் என்பதால் மாற்றும் திறமையும் வேகத்தைக் கூட்டி குறைத்து பலதரப்பட்ட லெந்த்களில் வீசும் திறமையும், தொடர்ந்து லெந்தில் வீசி பேட்ஸ்மெனின் பொறுமையைச் சோதிக்கும் சீரான தனமையும் அவரிடம் இருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று கூறுகிறார் டேவிட் வார்னர்.
இந்நிலையில் டி. நடராஜன் டெஸ்ட்டில் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த டேவிட் வார்னர், “நல்ல கேள்வி. ஆனால் என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. ரஞ்சி டிராபியில் அவர் எப்படி என்பது உங்களுக்குத்தான் தெரியும், நாள் முழுதும் அவர் எப்படி வீசுவார் என்பது பற்றிய விஷயம் அது.
அவரிடம் லைன் அண்ட் லெந்த் உள்ளது, ஆனால் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்த ஓவர்களில் வீசுவாரா? நான் 100% உறுதியாகக் கூற முடியவில்லை.
எனக்கு முகமது சிராஜ் பற்றி கொஞ்சம் தெரியும். சிகப்புப் பந்தில் அவரது திறமைகளை ஓரளவுக்கு அறிவேன். சிராஜ் தன் அறிமுக டெஸ்ட்டில் பிரமாதமாக வீசினார். நட்டுவும் அதே போல் வீசுவார் என்று நான் நம்புகிறேன்.தன் குழந்தைப் பிறப்பை விடுத்து இங்கு வந்து ஆடுவது நட்டுவுக்கு ஒரு பெரிய விருதுதான். வலைப்பவுலராக இருந்து டெஸ்ட் அணிக்குள் நுழைகிறார் என்றால் அது ஒரு சாதனைதான். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
சன் ரைசர்ஸுக்காக அவரது கேப்டன் என்ற முறையில் கூறுகிறேன், அவர் ஒரு நல்ல பவுலர், மிக நல்ல பவுலர். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நன்றாக வீச என் வாழ்த்துக்கள்.” என்றார் வார்னர்.