26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

சொட்டு நீர் பாசனத்திற்கு பள்ளம் தோண்ட மானியம்

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

சின்னசேலம் தாலுகாவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, பள்ளம் தோண்டுவதற்கான மானியம் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்தியராஜ் செய்திக்குறிப்பு:சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் மரவள்ளி, மஞ்சள், சேனை, வெங்காயம் மற்றும் காய்கறி போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்கனவே அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது.இதில் விவசாயிகளுக்கு கூடுதலாக குழாய்களை அமைக்க பள்ளம் எடுக்க அதிக செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.இதனை அரசு கவனத்தில் கொண்டு, குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ெஹக்டர் ஒன்றுக்கு 3000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ெஹக்டர் அளவிற்கு மானியம் வழங்குகிறது.சொட்டு நீர் பாசனம் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பதிவின் போது விவசாயியின் வங்கி கணக்கு விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.எனவே, இந்த வாய்ப்பினை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sottu Nir Pasanam News 01.08.2020
Sottu Nir Pasanam News 01.08.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This