கள்ளக்குறிச்சி பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் தச்சூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளன.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் 1,250க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. 9 முதல் 10 மாத பயிரான மஞ்சள், உணவு, மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் பயிர், ஈரோடு மாவட்டத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், மஞ்சள் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும், பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மஞ்சள் பயிருக்கு தண்ணீர் அதிகம் தேவை என்பதால் சொட்டுநீர் பாசனம் மூலம் விளைவிக்கப் படுகிறது.தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால், தச்சூர் பைபாஸ் சாலையில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் பயிர் செழித்து வளர்ந்துள்ளன. இதனால், விவசாயிகள்