கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழகத்தின் 34வது மாவட்டமாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கள்ளக்குறிச்சி உதயமானது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கிரண் குராலா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இடம், ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நிகழ்ச்சியினை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., மாலதி, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.எஸ்.பி., ராமநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.