சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய கார் டிரைவர் ….

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஓசூர் அலசனத்தம் பகுதியில் குடியிருக்கும் கார் டிரைவர் டேனியல் (22)-என்பவருக்கும் ஃபேஸ்புக் இணையதளம் மூலமாக நட்பு மலர்ந்தது,

நாளடைவில் இந்த பழக்கம் அவ்வப்போது தனிமையாக சந்தித்து பேசும் நிலையை எட்டியது ,இதை சாதகமாக்கிக் கொண்ட டேனியல், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை வெளியில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்,

இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் , இதனை தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் ,சிறுமியை அழைத்து சென்று மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டத்தில் சிறுமி கர்ப்பமான விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது,

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓசூர் மாநகர மகளிர் காவல்துறையினர் சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான டேனியலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.